கும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர்களுக்குப் பயிற்சி

கும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர்களுக்குப் பயிற்சி
ஊராட்சி-செயலாளர்களுக்குப்-பயிற்சி

கும்மிடிப்பூண்டியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் பதிவிடுவது குறித்து ஊராட்சி செயலாளர்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியப் பொறியாளர் கலைவாணி பயிற்சி அளித்தார். ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்தப் பயிற்சியில் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் ஊராட்சி செயலாளர்களின் பெயரில் கணக்கு தொடங்கி, அதில் அவர்களுக்கென தனி பக்கத்தை ருவாக்கி அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை பதிவிடுவது குறித்து காணொலிக் காட்சி மூலம் விளக்கப்பட்டது.

Source : www.dinamani.com

You may also like...