கும்மிடிப்பூண்டி தொகுதி

கும்மிடிப்பூண்டி தொகுதி

தொகுதி பெயர் : கும்மிடிப்பூண்டி

தொகுதி எண் : 1

அறிமுகம் :

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கும்மிடிப்பூண்டியும் ஒன்று. எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகத்தின் முதல் தொகுதி என்ற பெருமை உண்டு.

எல்லை :

தமிழக-ஆந்திர எல்லையோரப் பகுதியாகத் திகழும் கும்மிடிப்பூண்டி தொகுதியானது தொகுதி சீரமைப்புக்குப் பிறகு கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளான, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளையும், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் 43 ஊராட்சிகளையும், பூண்டி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளில் உள்ள 27 ஊராட்சிகளையும் புதிதாகத் சேர்த்து 131 ஊராட்சிகளை உள்ளடக்கிய தொகுதியாக மாறியுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பேரூராட்சிகள்: 2

கும்மிடிப்பூண்டி } 15 வார்டுகள்

ஊத்துக்கோட்டை } 15 வார்டுகள்

கிராம ஊராட்சிகள்: 131

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் (61): அன்னநாயக்கன் குப்பம், ஆரம்பாக்கம், ஆத்துப்பாக்கம், அயநெல்லூர், பூதூர், செதில்பாக்கம், ஏடூர், எகுமதுரை, ஈகுவார்பாளையம், எளாவூர், ஏனாதி மேல்பாக்கம், எருக்குவாய், கெட்ணமல்லி, குருவராஜ கண்டிகை, கண்ணம்பாக்கம், கண்ணன்கோட்டை, காரணி, கீழ்முதலம்பேடு, கொள்ளானூர், குருவாட்டுச்சேரி, மாநெல்லூர், மாதர்பாக்கம், மங்களம், மங்காவரம், மெதிப்பாளையம், மேலக்கழனி, மேல்முதம்பேடு, முக்கரம்பாக்கம், நரசிங்கபுரம், நத்தம், நெல்வாய், நேமளூர், ஓபசமுத்திரம், பாதிரிவேடு, பாலவாக்கம், பல்லவாடா, பன்பாக்கம், பாத்தபாளையம், பெத்திகுப்பம், பெரிய ஓபுளாபுரம், பெரியபுலியூர், பெருவாயல், போந்தவாக்கம், பூவலை, பூவலம்பேடு, புதுகும்மிடிப்பூண்டி, புதுப்பாளையம், புதுவாயல், ரெட்டம்பேடு, சாணாபுத்தூர், சித்திராஜ கண்டிகை, சிறுபழல்பேட்டை, சிறுவாடா, சூரப்பூண்டி, சுண்ணாம்புகுளம், தண்டலசேரி, தேர்வழி, தேர்வாய், தோக்கமூர், வழுதிலம்பேடு, கரடிபுத்தூர்.

எல்லாபுரம் ஒன்றியம் (43): 43 பனப்பாக்கம், 82 பனப்பாக்கம், அக்கரம்பாக்கம், ஆலப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், அமிர்தாநல்லூர், அத்திகாவனூர், அத்திவாக்கம், ஆத்துப்பாக்கம், ஏனாம்பாக்கம், கல்பட்டு, கன்னிகைபேர், கிளாம்பாக்கம், குமரப்பேட்டை(ரால்லபாடி), லட்சிவாக்கம், மதுரவாசல், மாலந்தூர்,மாம்பள்ளம், மஞ்சங்காரணி, நெய்வேலி, பாகல்மேடு, பாலவாக்கம், பனையஞ்சேரி, பேரண்டூர், பெரியபாளையம், பெருமுடிவாக்கம், பூச்சி அத்திப்பேடு, பூரிவாக்கம், புன்னப்பாக்கம், செங்கரை, செஞ்சிஅகரம், சென்னாங்கரணி, சூளைமேனி, தாமரைகுப்பம், தண்டலம், தாராட்சி, திருகண்டலம், திருநிலை, தொளவேடு, தும்பாக்கம், வடமதுரை, வண்ணான்குப்பம், காக்கவாக்கம்.

பூண்டி ஒன்றியம் (27): பென்னாலூர்பேட்டை, ராமலிங்காபுரம், வேலம்மா கண்டிகை, மேலகரமனூர், நந்திமங்கலம், போந்தவாக்கம், அனந்தேரி, பெருதிவாக்கம், மாம்பாக்கம், பெருஞ்சேரி, கச்சூர், கூனிபாளையம், திம்மபூபாளபுரம், வெள்ளாத்தூர் கோட்டை, நெல்வாய், அம்மம்பாக்கம், சோமதேவன்பட்டு, வேலகாபுரம், மாமண்டூர், தேவாந்தவாக்கம், மயிலாப்பூர், நம்பாக்கம், ஆட்ரம்பாக்கம், ஓதப்பை, மெய்யூர், கம்மவார்பாளையம், ஆலப்பாக்கம்.